News October 27, 2025
கரூர்: கோர விபத்தில் தாய் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில், அஜித் குமார் என்பவர் தனது தாய் ராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராணி என்பவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 27, 2025
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

கரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தலைவர்/கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நாளை (28.10.25) காலை 10:30 மணிஅளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ள இரண்டாம் தளத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் 10 நிமிடம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி அளிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
News October 27, 2025
கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கே பேட்டை மற்றும் வதியம் ஆகிய பகுதிகளில் நாளை, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில் கே பேட்டை மற்றும் வதியம் பகுதியை சேர்ந்த அனைவரும் தங்களது கோரிக்கைகளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் சமர்ப்பிக்கலாம். இதில் 13 துறைகள் 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாம் கே பேட்டை சமுதாயக் கூடத்தில் நடைபெற உள்ளது.
News October 27, 2025
கரூர்: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள <


