News October 27, 2025
ASEAN மாநாடு: USA அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர்

மலேசியாவில் நடைபெற்று வரும் ASEAN உச்சிமாநாட்டில், USA வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். நேற்று, பாக்.,கை விட <<18114416>>இந்தியாவின் நட்பு<<>> முக்கியம் என ரூபியோ தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இருவரும் சர்வதேச அரசியல், வர்த்தக ஒப்பந்தம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
Similar News
News October 27, 2025
Cinema Roundup: ‘காந்தாரா’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

*VJ சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. *‘காந்தாரா: சாப்டர் 1’ படம் வரும் 31-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. *‘NEEK’ பட ஹீரோ பவிஷின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. *₹15 கோடி சம்பளம் கேட்பதாக வெளியான தகவலை மமிதா பைஜி மறுத்துள்ளார். *ஜாக்கிசானுடன் ஹிரித்திக் ரோஷன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்.
News October 27, 2025
தமிழகத்தில் SIR.. அதிமுக வரவேற்பு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு(SIR) அதிமுக சார்பில் வரவேற்பு தெரிவிப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனை மாநில அரசின் அலுவலர்கள்தான் மேற்கொள்வர் என்பதால், அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். SIR-க்கு திமுக, அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News October 27, 2025
இதை செய்யாதீங்க.. ஆபத்து!

கொரிய பெண்களை போல Clear Skin வேண்டும் என்ற மோகம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக பேஷியல், கிரீம்ஸ் என பலவற்றை செய்கின்றனர். ஆனால் நமது சருமத்தில் மெலனின் அளவு அதிகம். இதனால் Korean Glass Skin தோற்றத்தை பெற முடியாது. இதற்காக முயற்சித்து தேவையற்ற கிரீம்களை யூஸ் செய்தால் ஹைப்பர் பிக்மென்டேஷன், முகப்பரு, அலர்ஜிகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE THIS.


