News October 27, 2025
காஞ்சி: Gpay-யில் பணம் போனால் கவலை வேண்டாம்!

காஞ்சிபுரம்: இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News October 27, 2025
காஞ்சி: டிகிரி போதும், ரூ.30,000 சம்பளம்!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் இந்த <
News October 27, 2025
காஞ்சிபுரம் உழவர் சந்தையில் விலை நிலவரம்

காஞ்சிபுரம் உழவர் சந்தையில் இன்றைய (அக்,27) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.20-25, உருளைக்கிழங்கு ரூ. 30-35, சின்ன வெங்காயம் ரூ. 50-60, பெரிய வெங்காயம்-ரூ.20-25, தேங்காய் ரூ. 20-25 , அவரைக்காய் ரூ.30-40 என விற்பனையாகிறது.
News October 27, 2025
காஞ்சி: 124 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 123 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. மேலும் 135 ஏரிகள் 75%, 289 ஏரிகள் 50 %, 272 ஏரிகள் 25%, 87 ஏரிகள் 25%திற்கும் குறைவாக நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஏரிப் பகுதியை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.


