News October 27, 2025
டிகிரி போதும், மத்திய அரசில் வேலை..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited- BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc Engineering Degree முடித்தவர்கள், 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ₹40,000 – ₹1,40,000 வரை வழங்கப்படுகிறது <
Similar News
News October 27, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டால் என்ன செய்வது?

2003 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், SIR மேற்கொள்ளப்படும் போது எந்த ஆவணமும் சமர்பிக்க வேண்டியது இல்லை என ECI விளக்கம் அளித்துள்ளது. இறுதி <<18120268>>வாக்காளர் பட்டியலில்<<>>, வாக்காளர் பெயர் விடுபடுவது உள்ளிட்ட ஏதேனும் பிரச்னை இருந்தால் மாவட்ட கலெக்டரிடம் முதல் முறையீட்டை செய்யலாம். கலெக்டர் அதை நிராகரித்தால், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் 2-வது முறையீட்டை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
News October 27, 2025
இந்த அதிசய மனிதர்களை பற்றி தெரியுமா?

உங்களால் இசையை சுவைக்கவோ, ஒரு நிறத்தை குறிப்பிட்ட ஓசையாக கேட்கவோ முடியுமா? உலகத்தில் உள்ள 5% மக்களுக்கு இந்த சூப்பர் பவர் இருக்கு. இதை சினஸ்தீசியா என்கின்றனர். சாதாரண மனிதர்களுக்கு ஒரு இசையை கேட்கும்போது கேட்கும் திறன் மட்டுமே வேலை செய்யும். ஆனால் இவர்களுக்கு அனைத்து திறன்களுமே தூண்டிவிடப்படுவதால் இந்த அதிசயம் நிகழ்கிறது. டெஸ்லா, மர்லின் மன்றோ போன்றவர்களுக்கு சினஸ்தீசியா இருந்ததாக கூறப்படுகிறது.
News October 27, 2025
சற்றுமுன்: இளம் நடிகர் தற்கொலை

பாலிவுட்டில் பிரபலமான ஜம்தாரா 2 வெப் சீரிஸில் நடித்து கவனம் ஈர்த்த இளம் நடிகர் சச்சின் சாந்த்வாடே(25) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் வசித்துவந்த அவர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சாஃப்ட்வேர் என்ஜினியரான சச்சின், மராத்தி படங்களின் மூலம் திரையுலகில் அடியெடித்து வைத்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


