News April 18, 2024

தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலை

image

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 1.90 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. துணை ராணுவ படையினரும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 10,000 போலீசாரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News February 21, 2026

மகளிருக்கு ₹2,000.. வீடு தேடி அதிகாரிகள் வருகின்றனர்

image

மகளிர் உரிமைத்தொகைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் புதிதாக விண்ணப்பித்து, பின்னர் மேல்முறையீடு செய்தவர்களின் மனுக்களின் பரிசீலனை தொடங்கியுள்ளது. ரேஷன் கார்டு, ஆதார், மின் இணைப்பு எண் மற்றும் அரசின் விதிமுறைக்கு உள்பட்டு அவர்கள் தகுதியானவர்களா என்பதும் ஆராயப்பட்டு வருகின்றன. 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னர் பல லட்சம் பேர் இத்திட்டத்தில் இணைய வாய்ப்புள்ளதாம்.

News February 21, 2026

சத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: அன்புமணி

image

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டிவிட்டு சமூகநீதி வேடம் போடுவதாக CM ஸ்டாலினை அன்புமணி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களுக்கான <<19180474>>இட ஒதுக்கீடு<<>> செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அவர், சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது இது என சாடியுள்ளார். TN-ல் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு செய்த துரோகத்தை CM நினைத்து பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News February 21, 2026

இப்படி விளக்கேத்துங்க.. வீட்டில் அதிர்ஷ்டம் சேரும்!

image

தினமும் மாலை சரியான திசையில், சரியான முறையில் விளக்கேற்றினால், வீட்டில் அமைதி, செழிப்பு & லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தினமும் மாலை வீட்டின் பிரதான நுழைவாயில் அருகில், பசு நெய்யால் விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமானதாம். இதனால், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என்றும், வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து செல்வத்தை கொண்டு வரும் எனவும் நம்பப்படுகிறது.

error: Content is protected !!