News October 27, 2025

விழுப்புரம் : ஆட்சியரகத்தில் தீ குளிக்க முயற்சி!

image

விழுப்புரம் அருகேயுள்ள டட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் டிசோஸ். இவர் தாங்கள் குடியிருக்கும் இடத்தை இறந்த நபருக்கு தவறுதலாக அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்து விட்டதாகவும், இது குறித்து 10 ஆண்டுகளாக மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் இன்று(அக்.27) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி செய்தார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

Similar News

News October 27, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை!

image

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் <>இந்த லிங்கின் <<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

விழுப்புரம்: G-Pay-யில் பணம் போனால் கவலை வேண்டாம்!

image

விழுப்புரம்: இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 27, 2025

விழுப்புரத்தில் பெய்த மழை அளவு!

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுபடி, விழுப்புரம்: 1மி.மீ, முண்டியம்பாக்கம்: 1 மி.மீ, நேமூர்: 1 மி.மீ, மரக்காணம்: 1 மி.மீ, செஞ்சி: 14 மிமீ, திண்டிவனம்: 4 மி.மீ, வல்லம் 12 மி,மீ எனப் பதிவானது.

error: Content is protected !!