News October 27, 2025
JUST IN: ஓமலூர் அருகே விபத்து; இருவர் பலி!

தொப்பூர் கேண்டீன் அருகே இன்று காலை சுமார் 7 மணியளவில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நடுத்தர வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர்கள் சொந்த ஊர் காடையாம்பட்டி என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் விரைந்து வந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
சேலம்: ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி!

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று 27.10.2025 ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர். பொது சேவையில் நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என உறுதியெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News October 27, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் குறைதீர் முகாம்!

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (அக்.27) திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற வருகிறது. இதில் குடிநீர் வசதி, கல்லூரி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, திருமண தொகை மற்றும் இதர வசதிகள் வேண்டி பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
News October 27, 2025
மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுமா மாவட்ட நிர்வாகம்?

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுடைய மாணவ மாணவிகளுக்கான பள்ளி மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு வழங்கினர். தங்கள் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் இல்லை என்றும், இந்த நிலையில் ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்திருப்பதாகவும், இந்த உத்தரவைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


