News October 27, 2025

திருச்சி: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

image

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. <>இங்கு க்ளிக் செய்து<<>> பயனர் உள்நுழைவில் ரேஷனில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 27, 2025

திருச்சி: வாகன ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயற்சி

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருச்சி விமான நிலையத்தில் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களை அனுமதிக்க மறுப்பதாக கூறி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுக்க தவறியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

News October 27, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்.27ஆம் தேதி வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நாச்சியார் சரவணன் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.

News October 27, 2025

திருச்சி: டூரிஸ்ட் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி

image

திருச்சி-கரூர் சாலையில் கடியாக்குறிச்சி வளைவு பகுதியில் இன்று அதிகாலை டூரிஸ்ட் பேருந்தும், கனரக லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் ரோந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!