News October 27, 2025
வைட்டமின்-ஏ திரவம் இன்று முதல் வழங்கல்

திருப்பூர் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று அக்.27 முதல் நவ.1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 14 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் முகாம் நடைபெறும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
திருப்பூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 (அ) 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். (தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)
News October 27, 2025
திருப்பூரில் கிராம சபை கூட்டம்

உள்ளாட்சி தினமான வரும் நவ.1-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 ஊராட்சிகளிலும் கிராமசபை நடைபெற உள்ளது. இக்கிராம சபையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மணிஷ் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
திருப்பூர்: B.E/ B.Tech/ B.Sc போதும்! ரூ.1,40,000 வரை சம்பளம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ.14ம் தேதிக்குள் https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (SHARE)


