News October 27, 2025

இந்தியாவை விட பாகிஸ்தான் முக்கியம் அல்ல: USA

image

இந்தியாவின் நட்பை விட்டுக்கொடுத்து, பாகிஸ்தானுடன் USA நட்பு பாராட்டாது என அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் USA நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு உறுத்தலாக இருக்கலாம், ஆனால் பல நாடுகளுடன் நட்பு வைத்துக்கொள்வது அவசியமாகிறது என்றார். மேலும், இந்தியாவுடனான USA-வின் நட்பு ஆழமானது, முக்கியமானது மற்றும் வரலாற்று சிறப்பு மிக்கது எனவும் கூறியுள்ளார்.

Similar News

News October 27, 2025

BREAKING: மன்னிப்பு கேட்டார் விஜய்

image

மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய், உங்களின் குடும்பத்தில் ஒருவனான என்னை நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி, வேதனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்போதும் தானும், கட்சியும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதியளித்துள்ளார்.

News October 27, 2025

ஹாஸ்பிடலில் சீரியஸாக இருக்கிறாரா ஷ்ரேயஸ்?

image

ஷ்ரேயஸுக்கு ஏற்பட்டிருக்கும் Internal Bleeding எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? அதிகமாக ரத்த கசிவு ஏற்பட்டால் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் தடைபடும், இதனால் உறுப்புகள் செயலிழந்து போகலாம். மூளை, மார்பு, வயிற்று பகுதிகளில் ஏற்படும் ரத்த கசிவுகளால் உயிரே பறிபோகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், <<18116578>>ஷ்ரேயஸுக்கு விலா எலும்பில்<<>> காயம் ஏற்பட்டிருப்பதால் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

News October 27, 2025

டிகிரி போதும், மத்திய அரசில் வேலை..!

image

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited- BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc Engineering Degree முடித்தவர்கள், 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ₹40,000 – ₹1,40,000 வரை வழங்கப்படுகிறது <>https://bel-india.in/<<>> -ல் நவ.4-க்குள் விண்ணப்பியுங்கள். SHARE.

error: Content is protected !!