News October 27, 2025
FLASH: பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

TN-ல் 2024-25 கல்வி ஆண்டில் 311 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாதது தெரியவந்துள்ளது. இந்த பள்ளிகளில் 432 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள போதிலும், மாணவர் சேர்க்கை இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 27, 2025
டிகிரி போதும், மத்திய அரசில் வேலை..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited- BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc Engineering Degree முடித்தவர்கள், 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ₹40,000 – ₹1,40,000 வரை வழங்கப்படுகிறது <
News October 27, 2025
அடுத்த தலைமை நீதிபதியா சூர்யகாந்த்?

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.23-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணியை மத்திய சட்ட அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அனுபவத்தின் அடிப்படையில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள சூர்யகாந்தை தலைமை நீதிபதியாக நியமிக்க கவாய் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
News October 27, 2025
சற்றுமுன்: திமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரியில் அதிமுக, தவெகவில் இருந்து விலகி 150-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பர்கூரில் நடைபெற்ற விழாவில், திமுக MLA மதியழகன் முன்னிலையில் கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து திமுகவினர் வரவேற்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாற்றுக் கட்சியினரை இணைக்க திமுக தலைமை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.


