News October 27, 2025

சீனாவில் நிலநடுக்கம்: 5.5 ரிக்டர் அளவில் அதிர்வு

image

வடகொரிய எல்லையை ஒட்டியுள்ள சீனாவின் ஜிலின் மாகாணத்தில், 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஹுன்சுன் நகரில் உள்ள பல கட்டடங்களும் குலுங்கின. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பூமியின் அடியில் சுமார் 560 கிமீ ஆழத்தில் இருந்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மிதமான நிலநடுக்கம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேதம் குறித்த தகவல் வெளியாகிவில்லை.

Similar News

News October 27, 2025

விக்ரம் fans-க்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

image

விக்ரமின் 63-வது படம் குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் இந்த வாரத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்தை முதலில் மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக ஒரு அறிமுக இயக்குனர் அப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மாவீரன் படத்தை தயாரித்த அருண் விஸ்வா தான் #Vikram63-ஐ தயாரிக்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்புக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

News October 27, 2025

பிஹாரையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் அரசியல் (2/2)

image

சோசலிச கட்சியான JD(U) உடன் பயணித்தபடியே, பாஜக Hindutva-வை மாற்றாக முன்வைக்கிறது. TN-ல் திராவிட கட்சியான அதிமுகவுடன் கைகோர்த்தபடி, களத்தை திராவிடம் Vs இந்துத்துவம் என மாற்ற முனைகிறது. மாநிலத்தில் INDIA கூட்டணியை வழிநடத்தும் DMK, RJD அடுத்த தலைமுறையை (உதய், தேஜஸ்வி) கைகாட்டிவிட்டன; பாஜக எதிர்ப்பில் உறுதிகாட்டினாலும், எதிர்க்கட்சியாக மாநில கட்சிகளே (ADMK, JD(U)) தொடர வேண்டுமென விரும்புகின்றன.

News October 27, 2025

பிஹாரையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் அரசியல் (1/2)

image

67-ல் காங்., வீழ்ந்த மாநிலங்களில் பிஹாரும் TN-ம் முதன்மையானவை. பிஹாரில் லோஹியா சீடர்கள் (லாலு, நிதிஷ்) களத்தை பிடித்தனர். TN-ல் அண்ணாவின் தம்பிகள் (கருணாநிதி, எம்ஜிஆர்) ஆட்சியை தமதாக்கினர். ஜெ., மறைவுக்கு பிறகு அதிமுக vote bank சரிந்தது போல, பிஹாரில் நிதிஷின் JD(U), பாஜகவிடம் களத்தை இழந்துவருகிறது. பிஹாரில் இருதுருவ அரசியல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், TN-ம் தற்போது அதை நோக்கி நகர்ந்து வருகிறது.

error: Content is protected !!