News October 27, 2025

திண்டுக்கல்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

திண்டுக்கல் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit

Similar News

News October 27, 2025

திண்டுக்கல்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <>www.tnesevai.tn.gov.in<<>> , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

திண்டுக்கல்: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

உடல் தானம் செய்தவரை நேரில் அழைத்து வாழ்த்து!

image

வேடசந்தூர் – கூவக்காப்பட்டியை சேர்ந்த முருகேசன் தனது வாழ்நாளிற்கு பிறகு தனது முழு உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவும் விதமாகவும், தன்னால் பிற உயிர்கள் பயன் பெற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடும், உடல் தானத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பதிவு செய்துள்ள செய்தி அறிந்து, அவரை சென்று பாராட்டிய வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் பாராட்டினார்.

error: Content is protected !!