News October 27, 2025

உடுமலை அருகே ரயில் மீது மோதி முதியவர் தற்கொலை

image

திருப்பூர் உடுமலை அருகே கோவையில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் ரயில் கோமங்கலம் பகுதியில் வந்த போது திடீரென முதியோர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்தார் இந்த விபத்தில் ரயில் மோதி தூக்கி எறியப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News October 27, 2025

திருப்பூரில் கிராம சபை கூட்டம்

image

உள்ளாட்சி தினமான வரும் நவ.1-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 ஊராட்சிகளிலும் கிராமசபை நடைபெற உள்ளது. இக்கிராம சபையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மணிஷ் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

திருப்பூர்: B.E/ B.Tech/ B.Sc போதும்! ரூ.1,40,000 வரை சம்பளம்

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ.14ம் தேதிக்குள் https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (SHARE)

News October 27, 2025

BREAKING: திருப்பூரில் நாளை இங்கு கடையடைப்பு

image

மாநகராட்சி குப்பை விவகாரத்தில் ஏற்கெனவே இடுவாய், ஆறுமுத்தாம்பாளையம், வேலம்பாளையம் கிராமங்களில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடந்த ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தில் மேலும் 2 கிராமம் ஆன கரைப்புதூர், இடுவம்பாளையம் கிராமமும் போராட்டத்தில் கைகோர்ப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2 நாள்களுக்கு முன் இப்பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!