News October 27, 2025
திருப்பத்தூர்: சேமிப்பு கிடங்கில் நடந்த பயங்கரம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கார் நகர் முதல் தெருவில் தோல் கழிவுகள் சேமிப்பு கிடங்கு நடத்தி வருகிறார். இந்த நிலையில் கிடங்கில் நேற்று (அக்.26) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உமராபாத் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
Similar News
News October 27, 2025
திருப்பத்தூர் காவலர்களின் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைதளம் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளது, “இன்றைய டிஜிட்டல் உலகில் பல போலி செயலிகள் (Fake Apps) அதிகாரப்பூர்வமான போலவே உருவாக்கப்படுகின்றன, அவற்றை பதிவிறக்கம் செய்வது உங்கள் பணமும், தனிப்பட்ட தகவல்களும் ஆபத்துக்குள்ளாக்கும். எனவே எச்செயலியை பதிவிறக்கம் செய்வதை தவிர்ப்பீர்.” என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News October 27, 2025
திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
News October 27, 2025
திருப்பத்தூர்: உங்கள் PHONEல் இது இருப்பது கட்டாயம்!

1)TN alert: உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்: பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்: உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க <


