News October 27, 2025

பெரம்பலூர்: மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

image

பெரம்பலூர், தேனூர் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (57) விவசாயி, இவர் நேற்று இரவு வயலில் மின் மோட்டார் பெட்டியில் பழுதான ஒயரை சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெங்கராஜ் உடலை கைப் பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

‎பெரம்பலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 26,297 விண்ணப்பங்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதற்கு பின்பாக, பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தலுக்காக பெரம்பலூர் (தனி), குன்னம் என இரு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பெரம்பலூர் மாவட்டத்தில், மொத்தம் 26,297 விண்ணப்பங்கள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News January 30, 2026

பெரம்பலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 30, 2026

பெரம்பலுர்: மர்ம ஆசாமியை பிடித்த பெண்

image

குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட மூலக்காடு கிராமத்தை சேர்ந்த திலகவதி (32), திலகவதியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, திலகவதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திலகவதி சங்கிலியை பிடித்து கொண்டும், திருடன் என்று கூச்சலிட்டார். அப்பகுதி மக்கள் உதவியுடன் மர்ம ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திலகவதியின் செயல்பாட்டினை எஸ்பி பாராட்டினார்.

error: Content is protected !!