News October 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 501 ▶குறள்: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.▶பொருள்: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

Similar News

News October 27, 2025

சீனாவில் நிலநடுக்கம்: 5.5 ரிக்டர் அளவில் அதிர்வு

image

வடகொரிய எல்லையை ஒட்டியுள்ள சீனாவின் ஜிலின் மாகாணத்தில், 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஹுன்சுன் நகரில் உள்ள பல கட்டடங்களும் குலுங்கின. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பூமியின் அடியில் சுமார் 560 கிமீ ஆழத்தில் இருந்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மிதமான நிலநடுக்கம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேதம் குறித்த தகவல் வெளியாகிவில்லை.

News October 27, 2025

பெண்களே உஷார்! இந்த நோய் உயிரை பறிக்கும்

image

40 வயதான பெண்களுக்கு brain aneurysm நோய் வருவதற்கான அபாயம் அதிகம் இருக்கிறதாம். மூளையிலுள்ள ரத்த நாளங்கள் வீங்கி, வெடிப்பதைதான் brain aneurysm என்கின்றனர். அப்படி நடந்தால் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிர் பறிபோகலாம். இதற்கு Stress-ம் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, அடிக்கடி கழுத்து வலி, கடுமையான தலைவலி, திடீரென பார்வை மங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் டாக்டரை அணுகுங்கள். SHARE.

News October 27, 2025

விஜய்யின் அரசியல் போக்கு சரியா?

image

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல், மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் இன்று சந்திக்க இருக்கிறார். இதுகுறித்து TVK அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு கூட அழைப்பு விடுக்காமல் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது. ஒருபுறம் அரசியல் நெருக்கடிகள் இருந்தாலும், அதற்கு தீனிபோடும் வகையிலேயே விஜய்யும் செயல்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!