News October 27, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (அக்.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 27, 2025
செங்களப்பட்டு: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
News October 27, 2025
MONTHA: செங்கல்பட்டில் மழை வெளுக்கும்!

வங்கக்கடலில் மோன்தா புயல் நேற்று நள்ளிரவு உருவான நிலையில் இன்று (அக்.27) செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், காலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது. நாளை தீவிர புயலாக மாறும் மோன்தா ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மக்களே முன்னெச்சரிக்கையா இருங்க.
News October 27, 2025
செங்கல்பட்டு: மனைவியை கொன்ற கணவன் கைது

நீலாங்கரையை சேர்ந்த தனசேகர் மனைவி அகல்யா(36). இவரை, 2019ம் ஆண்டு, கணவர் தனசேகர் கொடூரமாக கொலை செய்தார். இவ்வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தனசேகர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால், நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. நீலாங்கரை தனிப்படை போலீசார், வெளியூரில் தலைமறைவாக இருந்த தனசேகரை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


