News October 27, 2025
எத்தனை மணி நேரம் தூங்குவது நல்லது?

உடல் ஆரோக்கியத்திற்காக அன்றாடம் போதுமான நேரம் தூங்குவது மிக அவசியம். வயது அடிப்படையில் 18-60 வயதுக்கு உட்பட்டவர்கள் குறைந்தது 7 மணி நேரம், 65 வயதுக்கு டாக்டர்கள் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். போதுமான நேரம் தூங்க தவறினால் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும். நீங்க எவ்வளவு மணி நேரம் தூங்குறீங்க?
Similar News
News January 19, 2026
கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடியா?

2021 போலவே, 2026 தேர்தலிலும் பெண்களின் வாக்குகளை குறிவைத்தே திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கிறது. இதை தான், கனிமொழி ‘திமுகவின் தேர்தல் அறிக்கை <<18897967>>கதாநாயகியாக <<>>இருக்கலாம்’ என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம், மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டுறவு சங்க நகைக்கடன் (3 சவரன்) தள்ளுபடி அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
News January 19, 2026
டெல்லியில் தமிழக பாஜக முக்கிய ஆலோசனை

டெல்லியில் பியூஷ் கோயல் இல்லத்தில் TN பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதிமுகவுடனான தொகுதி பங்கீடு, மோடியின் TN வருகை உள்ளிட்டவை குறித்து இதில் பேசப்பட்டுள்ளது. PM பங்கேற்கும் கூட்டத்தில் அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதால், அது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், L.முருகன், தமிழிசை, வானதி, H.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
News January 19, 2026
26/26 – இந்த ஆண்டு குடியரசு தினத்தின் ஸ்பெஷல் தெரியுமா?

உங்க காலண்டரை திருப்பி, இந்த வருட குடியரசு தின தேதியை கவனியுங்கள். நீங்கள் ஒரு அதிசயத்தை பார்க்கலாம். 26/01/2026 – ஆண்டின் 26-வது நாள், 2000-த்திற்கு 26 ஆண்டுகள் கழித்து வரும் வருடம். இந்த அரிய நம்பர் கூட்டணியில் வருகிறது இந்த ஆண்டு குடியரசு தினம். வரலாறு எப்போதும் நிகழ்வுகளால் மட்டும் உருவாவதில்லை, சில நேரங்களில் இதுபோன்று எண்களும் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்து விடுகின்றன. SHARE IT.


