News October 27, 2025
தவெக தலைவர்களுக்கு சிபிஐ சம்மன்

கரூர் துயரம் தொடர்பாக தவெக பொ.செ N.ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், இருவரும் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர். சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் A2 ஆக N.ஆனந்த், A3 ஆக நிர்மல் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 22, 2026
செங்கல்பட்டு: அதிகாலையில் பயங்கரம்!

கோவிலம்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் முருகேசன் என்பவர் பி.வி.சி கதவு, ஜன்னல் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த கடையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மேடவாக்கம் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும், விற்பனைக்குத் தயாராக இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 22, 2026
பதவியிலிருந்து உதயநிதி நீக்கப்பட வேண்டும்: BJP

தமிழ்நாட்டில் EPS தலைமையிலான கூட்டணி, ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். EPS-யுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் குடும்ப ஆட்சி மீது அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளதாகவும் சாடியுள்ளார். <<18913574>>மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும்<<>> வகையில் பேசும் உதயநிதி, அரசு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News January 22, 2026
கணவரை கொன்றுவிட்டு ஆபாச படம் பார்த்த மனைவி

‘என் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்’ என மனைவி கூற, உறவினர்களும் நம்பியுள்ளனர். ஆனால் கணவர் காதின் அருகில் இருந்த ரத்தம் சந்தேகத்தை எழுப்ப, போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. அதில், காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவி கொன்றது தெரியவந்துள்ளது. அத்துடன், கணவரின் சடலம் அருகிலேயே அமர்ந்து இரவு முழுவதும் மனைவி ஆபாச படம் பார்த்துள்ளார். ஆந்திராவில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


