News October 26, 2025

உங்கள் மகளுக்கு இந்த பிரச்னை இருக்கா?

image

தற்போது இருக்கும் வாழ்வியல் முறை, உணவு பழக்கங்களால் பருவமடைந்த உடன் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை பற்றிய போதிய அறிவு பள்ளியில் படிக்கும் அவர்களுக்கு இருக்காது என்பதால், பெற்றோர்கள்தான் கவனிக்கணும். உங்கள் பிள்ளைக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, முகங்களில் முடி, அதீத வலி, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் இருக்கா என்பதை தெரிஞ்சிக்கோங்க. டாக்டரை அணுகினால் சீக்கிரமே சரி செய்யலாம். SHARE.

Similar News

News October 27, 2025

EPS எங்களை பாராட்டவா செய்வார்? துரைமுருகன்

image

CM ஸ்டாலின் ஒரு சினிமா விமர்சகராக மாறிவிட்டார் என்று EPS கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் என்றால் அப்படித்தான் பேசுவார், பிறகு எங்களை பாராட்டவா செய்வார் என்று தெரிவித்தார். மேலும், CM உத்தரவின் பேரில் நெற்பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News October 27, 2025

ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ரஹானே

image

ரஞ்சி டிராபியில் இன்று ரஹானே 159 ரன்களை விளாசினார். இதையடுத்து அவர் பேசும்போது, தன்னை போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆஸி.,க்கு எதிரான BGT தொடரின் போது அணிக்கு நான் தேவைப்பட்டேன். ஆனால், BCCI தன்னிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. வயது என்பது வெறும் எண் தான் என்பதை ரோஹித்தும், கோலியும் நிரூபித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 501 ▶குறள்: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.▶பொருள்: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

error: Content is protected !!