News October 26, 2025

இசைத்துறையிலும் கால் பதிக்கும் AI!

image

இதுவரை புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கி வந்த AI, தற்போது இசைத்துறையிலும் கால் பதிக்க உள்ளது. எழுத்து மற்றும் ஆடியோ குறிப்புகளில் இருந்து இசையை உருவாக்கும் புதிய AI Tool-ஐ OpenAI உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, USA-ல் உள்ள புகழ்பெற்ற ஜூலியார்ட் கலை பள்ளி மாணவர்களுடன் OpenAI ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இசைத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.

Similar News

News January 26, 2026

தவெக முக்கிய நிர்வாகி மீது வழக்கு பாய்ந்தது!

image

தவெகவின் தேனி மாவட்ட செயலாளராக இருப்பவர் லெப்ட் பாண்டி. இவர் தனது SM-ல் சீமான், சாட்டை துரைமுருகனை பற்றி ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி போலீசில் நாதக சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், லெப்ட் பாண்டி மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 26, 2026

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. புதிய அப்டேட்

image

தஞ்சையில் இன்று திமுகவின் மகளிர் அணி மாநாடு ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. முன்னதாக, மகளிருக்கு மாதம் ₹2000 வழங்கப்படும் என EPS அறிவித்த நிலையில், சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்து CM ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய மாநாட்டில் பெண்களை மையப்படுத்தி புதிய திட்டங்களுடன், மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

News January 26, 2026

அமெரிக்காவின் ரகசிய ஆயுதத்தை வெளியிட்ட டிரம்ப்

image

வெனிசுலா அதிபர் <<18758081>>மதுரோவை கைது<<>> செய்ய பயன்படுத்தப்பட்ட ரகசிய ஆயுதம் குறித்த தகவலை டிரம்ப் பகிர்ந்துள்ளார். Discombobulator என்பதன் மூலமே வெனிசுலாவில் இருந்த ரஷ்ய மற்றும் சீன ஏவுகணைகளை செயலிக்க வைத்ததாகவும், இதுகுறித்து விரிவாக சொல்ல தனக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீதான தாக்குதல்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!