News October 26, 2025
ரோஹித் படைத்த வரலாற்று சாதனை

ஆஸி.,க்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசினார். இதன்மூலம், அனைத்து ஃபார்மெட்களிலும் ஓபனிங் இறங்கி இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்த வீரராக அவர் உருவெடுத்துள்ளார். ரோஹித் 15,787 ரன்களுடன் முதலிடத்திலும், சேவாக் 15,758, சச்சின் 15,335 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். 2007-ல் ரோஹித் அறிமுகமானாலும், 2013 முதலே ஓபனிங் இறங்கி விளையாடி வருகிறார்.
Similar News
News October 27, 2025
உலகிலேயே விலை உயர்ந்த உணவுகள்!

ஹோட்டலுக்கு செல்லும் போது உணவின் விலை சற்று அதிகமாக இருந்தால், மீண்டும் அங்கு செல்வதற்கு யோசிப்போம். ஆனால், மேலே உள்ள உணவுகளின் விலையை பார்த்தால், இவ்வளவு காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழும். புகைப்படங்களை SWIPE செய்து பார்ப்பதுடன், நீங்கள் சாப்பிட்ட விலை உயர்ந்த உணவின் பெயரை கமெண்ட் பண்ணுங்க..
News October 27, 2025
மீண்டும் இணைகிறதா பாஸ் கூட்டணி?

‘நீயெல்லாம் நல்லா வரணும்டா’ என்று நட்புக்கான கலக்கல் காம்போவாக சினிமாவில் ஜொலித்தவர்களில் ஆர்யா – சந்தானமும் உண்டு. பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, சேட்டை என இந்த கூட்டணிக்கென்று தனி ரசிகர்களே உள்ளனர். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 கதைகளை இருவருமே கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ஜாய் தான்!
News October 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 27, ஐப்பசி 9 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை


