News October 26, 2025

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்றுநர்கள் தேவை

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகளை நடத்த அனுபவம் மற்றும் திறமைமிக்க பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் 04.11.2025 தேதிக்குள் சுயவிவரக் குறிப்புகளுடன் (Bio-Data) நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 22, 2026

மாமனாரை வெட்டிய மருமகன் கரூரில் பயங்கரம்!

image

கரூர் மேட்டு மகாதானபுரத்தில், மது போதையில் இருந்த தர்மதுரை என்பவர் தனது மாமனார் வடிவேலை ஆபாசமாகத் திட்டி, அருவாளால் தலையில் வெட்டினார். பலத்த காயமடைந்த வடிவேல் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 22, 2026

கரூருக்கு அறிவித்தது தமிழக அரசு!

image

தமிழக அரசு கரூரில் 64,000 சதுர அடியில், தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியுள்ளது. ரூ.37 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணிகள் 4 மாதங்களில் துவங்கவுள்ளன. இதே போல் நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உருவாகவுள்ளது.

News February 22, 2026

கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!