News October 26, 2025
புதிய ரேஷன் கார்டு.. இந்த தவறை செய்யாதீர்

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் அண்மையில் திருமணம் செய்தவர்களே. அவர்கள் செய்யும் தவறு, முந்தைய ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயரை நீக்குவதில்லை. கணவன், மனைவி இருவரும் தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து தங்களது பெயர்களை நீக்கிய பிறகு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், சரியான முகவரியை கொடுக்க வேண்டும். இல்லையெனில், அதிகாரிகளின் விசாரணையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். SHARE IT
Similar News
News October 27, 2025
வக்ஃபு சட்டம் குப்பையில் வீசப்படும்: தேஜஸ்வி யாதவ்

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் குப்பையில் கிழித்து எறியப்படும் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பிஹார் தேர்தலுக்கான பரப்புரையில் பேசிய அவர், அம்மாநில CM நிதிஷ்குமார் மதவாத சக்திகளுடன் கைகோர்ப்பதால் மாநிலத்தில் வெறுப்பு பரவுகிறது என்றும் விமர்சித்தார். வக்ஃபு குறித்த தேஜஸ்வியின் ஆவேச பேச்சு தற்போது பிஹார் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News October 27, 2025
RO-KO பார்ட்னர்ஷிப்.. ரோஹித் நெகிழ்ச்சி

ஆஸி.,க்கு எதிரான ODI தொடருக்கு தயாராவதற்கு தன்னிடம் நிறைய நேரம் இருந்ததாக ரோஹித் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அது தனக்கு தற்போது உதவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நீண்ட நாள்களுக்கு பிறகு கோலியுடன் 100+ பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பாக இருந்ததாகவும், இணைந்து பேட்டிங் செய்வது இருவருக்குமே மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


