News October 26, 2025
நிலுவை வழக்குகளும்.. கோர்ட் விடுமுறைகளும்!

. செப்டம்பர் 2025 கணக்கின் படி, நாட்டில் 5.60 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். பொது சேவையில் உள்ள போலீஸ், ராணுவ வீரர்கள், டாக்டர்கள், ஊடகத்துறையினர் போன்றவர்கள் 365 நாளும் பணி செய்யும் நிலையில், நீதிமன்றங்கள் மட்டும் ஏன் 196 நாள்கள் மட்டுமே வேலை செய்கின்றன என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் அல்லவா.. நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News October 27, 2025
BREAKING: இந்தியா ஆட்டம் மழையினால் ரத்து

Women’s CWC-ல் இந்தியா, வங்கதேசம் இடையிலான ஆட்டம் மழையினால் ரத்தானது. மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் 27 ஓவர்களாக குறைக்கப்பட, முதலில் ஆடிய வங்கதேசம் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. DLS விதிப்படி இலக்கு 126 ரன்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா 57 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
News October 27, 2025
எத்தனை மணி நேரம் தூங்குவது நல்லது?

உடல் ஆரோக்கியத்திற்காக அன்றாடம் போதுமான நேரம் தூங்குவது மிக அவசியம். வயது அடிப்படையில் 18-60 வயதுக்கு உட்பட்டவர்கள் குறைந்தது 7 மணி நேரம், 65 வயதுக்கு டாக்டர்கள் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். போதுமான நேரம் தூங்க தவறினால் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும். நீங்க எவ்வளவு மணி நேரம் தூங்குறீங்க?
News October 27, 2025
அதிகாலையில் புயல்… கனமழை வெளுத்து வாங்கும்

நாளை(அக்.27) அதிகாலையில் மொன்தா புயல் உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இது, நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி, காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதனையொட்டி, நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாய் இருங்கள்!


