News October 26, 2025

ஆன்லைன் டிக்கெட் புக்கிங், இனி தயாரிப்பாளருக்கும் ஷேர்!

image

படங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது, புக்கிங் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு ஷேர், தயாரிப்பாளர்களுக்கும் தரப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், புக்கிங் நிறுவனம் என மூவருக்கும் பங்கை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

தேர்தலை குறிவைத்து பத்ம விருதுகள்: கார்த்தி சிதம்பரம்

image

இந்தாண்டுக்கான பத்மவிருதுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில் அதனை காங்., MP கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். தனது X-ல் அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை இருந்திருந்தால், பத்மவிருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது அரசுக்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும் என்றும், ஆனால் இப்போது அது மிகவும் எளிது; தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்தால் போதும் எனவும் கூறியுள்ளார்.

News January 26, 2026

ஒரு யூனிட் மின்சாரம் ₹3.50-க்கு கிடைக்க வாய்ப்பு!

image

மகாராஷ்டிராவில் 2 தோரியம் அடிப்படையிலான மின் நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது. உலகளவில் யுரேனியம் மூலம் அதிக மின்சாரம் பெறப்படும் நிலையில், தோரியம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும் ஒரு யூனிட்டுக்கு ₹3.50 என்ற குறைந்த விலையில் மின்சாரம் இனி கிடைக்கும். TN-ல் தற்போது பயன்பாட்டை பொறுத்து ஒரு யூனிட்டுக்கு ₹4.95 – ₹12 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.

News January 26, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 592 ▶குறள்: உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். ▶பொருள்: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

error: Content is protected !!