News October 26, 2025
தனியார் பல்கலை. திருத்த சட்ட மசோதா வேண்டாம்: திருமா

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் தனியார் பல்கலை., திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இதை திரும்ப பெற வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு, திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டம் மூலம் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகள் கூட, தங்களை பல்கலை.,களாக மாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது உயர்கல்வி வணிகத்தை அதிகரிக்க செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 26, 2025
மாடர்ன் உடையில் மிளிரும் அம்ரிதா ஐயர்

பிகில், லிஃப்ட் படங்களில் கவனம் ஈர்த்த அம்ரிதா ஐயர், தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக உள்ளார். அடிக்கடி போட்டோஷூட் எடுக்கும் வழக்கம் கொண்ட இவர், இம்முறை மாடர்ன் உடையில் மிளிரும் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவற்றுக்கு ❤️❤️❤️ விடும் ரசிகர்கள், மீண்டும் எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பீர்கள் என கமெண்ட் செக்ஷனில் கேட்கின்றனர்.
News October 26, 2025
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய பழங்கள்

மழைக்காலங்களில் சில பழங்களை தவிர்ப்பது உடலுக்கு நல்லது. உடலுக்கு அதிக குளிர்ச்சி தருவதால், எளிதாக சளி பிடிக்கும். இதனால், உடல் பாதிக்கப்பட்டு காய்ச்சல் வரவும் வாய்ப்பு உள்ளது. அவை என்னென்ன பழங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல், வேறு ஏதேனும் பழங்கள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News October 26, 2025
BREAKING: விஜய்யின் திட்டம் வெளியானது

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டதில், 33 குடும்பத்தினர் பஸ் மூலம் மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் சில குடும்பத்தினர் விமானம் மூலம் நாளை வரவுள்ளனர். நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்படும் அவர்களை, நாளை காலை 10 – மாலை 4 மணி வரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிக்கிறார். இதனையடுத்து, கட்சி பணியை முடுக்கிவிடும் அவர், மீண்டும் பரப்புரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


