News October 26, 2025

காஞ்சி: 10th போதும், சூப்பர் வேலை!

image

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிகளில் காலியாக உள்ள 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி அக்.28. ஷேர்!

Similar News

News February 6, 2026

காஞ்சிபுரத்தில் நாளை பவர் கட்!

image

பழையசீவரம் துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.7) காலை 9 மணி முதல் பிற்பகம் 3 மணி வரை மதூர், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலூர், மேலச்சேரி, உள்ளாவூர், பழைய சீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிபேட்டை, புத்தகரம், கீழ் ஒட்டிவாக்கம், ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன் பேட்டை, அருங்கம்பாக்கம், அவளூர் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2026

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

சுங்குவார்சத்திரம் அடுத்த கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். இவர், தனது மனைவி நிவேதாவுடன்(27) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மொளச்சூர் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிய ஜெகதீஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 6, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!