News October 26, 2025
2025-ல் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படம்

ரிஷப் ஷெட்டியின் ’காந்தாரா சாப்டர் 1’ நடப்பு ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அக்.2-ல் வெளியான இப்படம் உலகளவில் ₹809 கோடி வசூலித்துள்ளது. 2வது இடத்தில், விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சாவா’ திரைப்படம் உள்ளது. இப்படம், உலகளவில் ₹807 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக வசூலை ஈட்டிய Top 10 படங்களை தெரிந்துகொள்ள <<18110281>>Click Here<<>>.
Similar News
News October 26, 2025
Cinema Roundup: ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா?

*’LIK’ படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல். *‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடிக்கிறாராம். *ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘தனுஷ் 55’ படத்தில் ‘பைசன்’ கேமராமேன் எழில் அரசு இணைந்துள்ளார். *ஏ.எல்.விஜய் இயக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
News October 26, 2025
அதிமுக கைகட்டி வேடிக்கை பார்க்காது: EPS

சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் குடியிருப்புகளை கட்ட அரசு அனுமதி கொடுத்துள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு அரணாக இந்த சதுப்பு நிலங்கள் திகழ்வதாகவும், மக்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதை ஏற்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இதை அதிமுக கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றும் கூறியுள்ளார்.
News October 26, 2025
பாத்ரூமில் அக்கா, தங்கை பலி.. சாவு இப்படியா வரணும்

கர்நாடகாவில் பாத்ரூமில் இருந்த கேஸ் கீசரில், LPG கேஸ் கசிந்து, அதை சுவாசித்த குல்ஃபாம், தாஜ் என்ற 2 சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். நீங்கள் இதை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். யூனிட் வெளியே நிறுவப்பட வேண்டும், பயன்பாட்டில் இல்லாத போது ஆஃப் செய்ய வேண்டும், கேஸ் கசிகிறதா என அடிக்கடி சோதிக்கவும் கூறுகின்றனர்.


