News October 26, 2025

SIR தமிழகத்தில் நடக்க கூடாது என்பதில் உறுதி: கனிமொழி

image

பிஹார் போன்ற பல மாநிலங்களில் SIR-ஐ பயன்படுத்தி லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக MP கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். இதுபோல தமிழ்நாட்டில் நடக்க கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிஹார் தேர்தலில் நீதியும், ஜனநாயகமும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 26, 2025

பிஹார்: INDIA கூட்டணி தேர்தல் வாக்குறுதிகள்

image

பிஹார் எதிர்க்கட்சிகளின் CM வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், ₹50 லட்சத்திற்கு காப்பீடு திட்டம். முடி திருத்தம் செய்பவர்கள், தச்சர்கள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக, குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.

News October 26, 2025

ரோஹித் படைத்த வரலாற்று சாதனை

image

ஆஸி.,க்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசினார். இதன்மூலம், அனைத்து ஃபார்மெட்களிலும் ஓபனிங் இறங்கி இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்த வீரராக அவர் உருவெடுத்துள்ளார். ரோஹித் 15,787 ரன்களுடன் முதலிடத்திலும், சேவாக் 15,758, சச்சின் 15,335 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். 2007-ல் ரோஹித் அறிமுகமானாலும், 2013 முதலே ஓபனிங் இறங்கி விளையாடி வருகிறார்.

News October 26, 2025

அதிபயங்கரமான டாப்-10 பேய் படங்கள்

image

திரைப்படங்கள் பார்ப்பதில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு ரசனை இருக்கும். அந்த வகையில் பேய் படங்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அப்படிப்பட்ட, அதிபயங்கரமான டாப்-10 பேய் படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்த்து, உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!