News October 26, 2025

3 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை இல்லை: வானதிசீனிவாசன்

image

கோவை எம்எல்ஏ வானதிசீனிவாசன் இன்று அறிக்கை வெளியிட்டார்.அதில்,
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ‘மாணவர் சேர்க்கை இல்லை’ என்ற காரணத்தைக் கூறி 51 சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டுள்ளன. விடுதிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என்றால் காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும். மாறாக, அதையே காரணம் காட்டி விடுதிகளை முடிவிடக் கூடாது. மேலும் சமூக நீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு என்றார்.

Similar News

News February 1, 2026

பொள்ளாச்சி அருகே கோர விபத்து: 2 பேர் பலி

image

பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கணுாரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், நேற்று தென்சங்கம்பாளையம் ஆனைமலை சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் பிராகாஷ் மற்றும் எதிரே பைக்கில் வந்த மணிகண்டன் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 31, 2026

கோவை – ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

image

பயணிகள் வருகை அதிகரிப்பால் கோவை – ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் எண் 06181: பிப்ரவரி 5, 12, 19 (வியாழன்) அதிகாலை 2.30-க்கு கோவையிலிருந்து புறப்படும். ரயில் எண் 06182: பிப்ரவரி 8, 15, 22 (ஞாயிறு) இரவு 10.05-க்கு ஜெய்ப்பூரிலிருந்து புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் இந்த ரயில்களுக்குப் பயணிகள் முன்பதிவு செய்யலாம்.

News January 31, 2026

கோவை: இரவு ரோந்து காவலர் விபரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!