News October 26, 2025

பெண்கள் வளர்ச்சியில் தமிழகம் டாப்: தங்கம் தென்னரசு

image

நேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ₹11 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை தங்கம் தென்னரசு வழங்கினார். அதன்பின் பேசிய அவர், மகளிர் சுய உதவிக்குழுக்களால் பெண்களின் பொருளாதாரம் உயர்வதோடு, சமூக மாற்றமும் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சமூக முன்னேற்றத்திலும் மிக உயர்ந்த நிலையில், தமிழகம் இருப்பதற்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.

Similar News

News October 26, 2025

புதிய ரேஷன் கார்டு.. இந்த தவறை செய்யாதீர்

image

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் அண்மையில் திருமணம் செய்தவர்களே. அவர்கள் செய்யும் தவறு, முந்தைய ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயரை நீக்குவதில்லை. கணவன், மனைவி இருவரும் தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து தங்களது பெயர்களை நீக்கிய பிறகு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், சரியான முகவரியை கொடுக்க வேண்டும். இல்லையெனில், அதிகாரிகளின் விசாரணையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். SHARE IT

News October 26, 2025

வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர அருமையான TIPS

image

ஆண்களே, முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் இளம்வயதிலேயே வழுக்கை விழுகிறதா? கவலைய விடுங்க. அதனை இயற்கையான முறையிலேயே சரி செய்யலாம். கற்றாழை ஜெல்லையும், ஆமணக்கு எண்ணெயையும் கலந்து முடியின் வேர்களில் தடவுங்கள். அரை மணி நேரம் ஊறவைத்த பின் தலைக்கு குளியுங்கள். வாரத்திற்கு 2 முறை இதனை செய்து வந்தால், வழுக்கையிலும் முடி வளரும். பலரது பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் SHARE.

News October 26, 2025

நவ.1 முதல் வங்கி விதிகளில் புதிய மாற்றம்

image

வங்கி கணக்கு மற்றும் லாக்கர் பயன்படுத்தும் பயனர்களுக்கு, நிதி அமைச்சகம் புதிய வாரிசுதாரர் நியமன விதிகளை அறிவித்துள்ளது. நவ.1 முதல் அமலாகும் இந்த விதிகளால், பயனர்கள் தங்களது வங்கி கணக்கு, லாக்கருக்கு நான்கு வாரிசுதாரர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு சேர வேண்டிய தொகையின் பங்கையும் குறிப்பிடலாம். பயனர் இறந்தால் நால்வருக்கும் பணம் சென்று சேரும். இதுவரை, ஒரே ஒரு வாரிசுதாரரை மட்டுமே நியமிக்க முடியும்.

error: Content is protected !!