News October 26, 2025

சென்னை: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள<> இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 26, 2025

கபடி வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை!

image

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா மற்றும் ரமேஷ்-க்கு பதக்கம் வென்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு முதல்வர் ஊக்கத்தொகையாக ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 26, 2025

சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ்!

image

சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி ஆகியவை பிரதான வருவாயாக உள்ளது. இதன் காரணமாக அக்.31 ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பவும், மேலும் ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

News October 26, 2025

சென்னை: மாரத்தனை துவக்கி வைத்த DCM

image

சென்னை நேப்பியர் பாலம் அருகே இன்று (அக்.26), இந்திய மருத்துவ சங்கத்தின் கோடம்பாக்கம் கிளை சார்பில் எலும்பு அடர்த்தி குறைவதால் ஏற்படும் எலும்பு பலவீனம், இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பக்கவாதம், உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடைபெற்றது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

error: Content is protected !!