News October 26, 2025
கருமத்தம்பட்டியில் VIRAL PHOTO

கோவை, கருமத்தம்பட்டி அருகே சென்னியாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான திருக்கோவில். இக்கோவிலில் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த வருடம் திருக்கல்யாண உற்சவத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் பத்திரிகை அடித்து வித்தியாசமான முறையில் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இப்படம் VIRAL ஆகி வருகிறது.
Similar News
News October 26, 2025
கோவை: பள்ளியில் வேலை.. ரூ.2 லட்சம் சம்பளம்!

கோவை மக்களே, மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10th, 12th, டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு https://nests.tribal.gov.in/ என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கவும். அக்.28-ம் தேதி கடைசி. (வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)
News October 26, 2025
ரயில்வே வேலை: அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்த 5,810 பணியிடங்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கில பயிற்றுநர்களுடன் மாதிரி தேர்வுகள், நூலக வசதி வழங்கப்படுகிறது. பதிவு மற்றும் இலவச பாடக்குறிப்புகளுக்கும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
News October 26, 2025
3 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை இல்லை: வானதிசீனிவாசன்

கோவை எம்எல்ஏ வானதிசீனிவாசன் இன்று அறிக்கை வெளியிட்டார்.அதில்,
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ‘மாணவர் சேர்க்கை இல்லை’ என்ற காரணத்தைக் கூறி 51 சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டுள்ளன. விடுதிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என்றால் காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும். மாறாக, அதையே காரணம் காட்டி விடுதிகளை முடிவிடக் கூடாது. மேலும் சமூக நீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு என்றார்.


