News October 26, 2025

வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.. தமிழக அரசு

image

டெல்டா மாவட்டங்களில் கனமழை & லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேங்கி இருந்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள 121 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாகியுள்ளது. நாகையில் மட்டும் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ₹183.19 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சையிலும் கொள்முதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News February 24, 2026

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் மதிமுக

image

திமுகவிடம் ஆட்சியில் பங்கும் கேட்கவில்லை, அதிக சீட் கேட்டு நெருக்கடியும் தரவில்லை என வைகோ சமீபத்தில் பேசியிருந்தார். அதற்கு மாறாக, நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகள் & ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என திமுகவுக்கு மதிமுக நெருக்கடி கொடுத்து இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், இந்த முறை தங்களின் சொந்த சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனவும் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளதாம்.

News February 24, 2026

நாடாளுமன்ற நட்புறவுக் குழு அமைப்பு.. எதற்கு?

image

நாடாளுமன்ற நட்புறவுக் குழுவை சபாநாயகர் ஓம் பிர்லா நியமித்துள்ளார். இதில் ப.சிதம்பரம், கனிமொழி, TR பாலு, தம்பிதுரை உள்ளிட்ட தமிழக MP-க்கள் உள்பட பிற மாநில MP-க்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், மலேசியா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். 60-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இக்குழுவின் நோக்கமாகும்.

News February 24, 2026

தங்கம் விலை மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்வு!

image

சென்னையில் தங்கம் விலை இன்று(பிப்.24) 22 கேரட் கிராமுக்கு ₹30 உயர்ந்து ₹14,890-க்கு விற்பனையாகிறது. இதனால், ஒரு சவரன் ₹1,19,120 என மீண்டும் ₹1,20,000-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இம்மாத(பிப்.) தொடக்கத்தில் சரிவைக் கண்ட தங்கம் விலையானது மாதத்தின் இறுதியில் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,760 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!