News October 26, 2025
வங்கிக்கடன்.. வந்தது HAPPY NEWS

தங்க நகைகளை போலவே, இனி வெள்ளி நகைகளை வைத்தும் கடன் பெற RBI ஒப்புதல் அளித்துள்ளது. இது 2026 ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. ஒரு தனிநபர் அதிகபட்சமாக 10 kg வெள்ளியை அடகு வைக்கலாம். அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை வெள்ளியை அடகு வைத்து கடனாக பெறலாம். ₹1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளுக்கு ₹85 ஆயிரம் வரை கடன் கிடைக்கும். தங்கத்திற்கு இணையாக பலரும் வெள்ளி வாங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News October 26, 2025
புயல் அலர்ட்.. கனமழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணியளவில் ‘மொன்தா’ புயல் உருவாகவுள்ளதாக IMD கணித்துள்ளது. இதன் எதிரொலியாக, பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இரவு 7 மணி வரை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், திருப்பத்தூர், தி.மலை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 26, 2025
நிலுவை வழக்குகளும்.. கோர்ட் விடுமுறைகளும்!

. செப்டம்பர் 2025 கணக்கின் படி, நாட்டில் 5.60 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். பொது சேவையில் உள்ள போலீஸ், ராணுவ வீரர்கள், டாக்டர்கள், ஊடகத்துறையினர் போன்றவர்கள் 365 நாளும் பணி செய்யும் நிலையில், நீதிமன்றங்கள் மட்டும் ஏன் 196 நாள்கள் மட்டுமே வேலை செய்கின்றன என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் அல்லவா.. நீங்க என்ன சொல்றீங்க?
News October 26, 2025
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. உயிர்கள் பலியான சோகம்

ஒருபக்கம் ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்த, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க பொருளாதார தடைகளை விதித்து, பேச்சுவார்த்தைக்கும் முயற்சி செய்து வருகிறார் டிரம்ப். மறுபக்கம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ் நகரில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், குழந்தைகள் உட்பட 31 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.


