News October 26, 2025

அதிமுக தொகுதிகளை குறிவைக்கும் பாஜக?

image

2021-ல் சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியை பாஜக கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், கொங்கு மண்டலத்தில் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பளித்தது அதிமுக. ஆனால், இம்முறை விடக்கூடாது என சேலத்தில் டெல்லி தலைவர்களை வைத்து கூட்டங்களை நடத்த பாஜக ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், சேலத்தை தனது கோட்டையாக கருதும் EPS கடுப்பில் இருக்கிறாராம். பாஜகவுக்கு சேலத்தில் EPS வாய்ப்பளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News October 26, 2025

அதிமுகவுடன் வந்தால் விஜய்க்கு நல்லது: KTR

image

விஜய்யின் மாஸ் ஓட்டாக மாறவேண்டும் என்றால், அவருக்கு பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் தேவை என்று KTR தெரிவித்துள்ளார். விஜய் கூட்டணிக்கு வந்தால், அதிமுகவினர் அந்த பயிற்சியாளர்களாக இருப்பர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவுடன் இணைந்தால் விஜய்க்கு தான் நல்லது என்று கூறியுள்ள KTR, விஜய் வந்தால், அதிமுக 220 சீட்டில் வெல்லும், வரவில்லை என்றால் 150 சீட்டில் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

News October 26, 2025

அனைத்து ரேஷன் கார்டுக்கும்… தமிழக அரசு ஏற்பாடு

image

TN-ல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருள்கள், இம்மாதமே வழங்கப்பட்டு வருகின்றன. பருவமழை தொடங்கியதால், அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருள்களை முன்கூட்டி வழங்க அரசு உத்தரவிட்டது. தீபாவளிக்கு பின் ரேஷன் கடைகளில் நவம்பருக்கான பொருள்கள் விநியோகம் தொடங்கியுள்ளன. ஆனால், பல இடங்களில் ரேஷன் பொருள்களை வழங்குவதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உங்க பகுதியில் விநியோகம் சீராக உள்ளதா?

News October 26, 2025

வெள்ளியில் முதலீடு பண்றீங்களா? உஷார்!

image

வெள்ளியின் விலை உயரும் என நம்பி அதனை வாங்குகின்றனர். ஆனால், வரலாற்றை எடுத்து பார்த்தால், வெள்ளி விலை உயரும்போதெல்லாம், அதன்பின் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 10 நாட்களில் கூட 1 கிலோ வெள்ளியின் விலை ₹37,000 வரை குறைந்து ₹1,70,000-க்கு சரிந்துள்ளது. எனவே, சந்தையில் வெள்ளியின் சப்ளை சீராவதற்கு சாதகமான அம்சங்கள் ஏற்பட்டால், விலை குறையும் என Experts சொல்றாங்க. எனவே, உஷார் மக்களே!

error: Content is protected !!