News October 26, 2025
மீண்டும் வரியை உயர்த்தினார் டிரம்ப்

கனடா பொருட்கள் மீது ஏற்கனவே 35% வரி விதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 10% வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா முதலில் விதித்த வரிக்கு எதிராக கனடாவில் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று ஒளிபரப்பானது. இதனை நிறுத்தும்படி டிரம்ப் கூறியும் கனடா அந்த விளம்பரத்தை திரும்பப்பெறவில்லை. இதனால் கடுப்பான டிரம்ப், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் வரியை உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Similar News
News October 26, 2025
BREAKING: தேர்தல் கூட்டணி.. புதிய அறிவிப்பை வெளியிட்டார்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை உருவாக்குவேன் என ராமதாஸ் கூறியுள்ளார். சேலத்தில் பேசிய அவர், பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு, போக போக தான் தெரியும் எனக் கூறினார். தந்தை, மகன் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் அதிமுக, அன்புமணியுடன் கூட்டணிக்கு நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 26, 2025
₹40,000 சம்பளம்.. மத்திய அரசில் 340 காலியிடங்கள்!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ✦கல்வித்தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree ✦வயது: 21- 25 ✦தேர்ச்சி முறை: கணினி வழி தேர்வு & நேர்காணல் ✦சம்பளம்: ₹40,000- ₹1,40,000 வரை ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 14-ம் தேதி. முழு தகவலுக்கு <
News October 26, 2025
நாளை தவெகவுக்கு முக்கியமான நாள்

கரூர் துயரம் தொடர்பான வழக்குகள் சென்னை HC-ல் நாளை(அக்.27) விசாரணைக்கு வரவுள்ளன. ➤முன்ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு ➤ஆதவ் அர்ஜுனா மீது பதிந்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ➤கரூர் எஸ்பி உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய மனு ➤அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய மனு என தவெக தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன.


