News October 26, 2025
சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி அறிவுறுத்தல்

பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் முன் பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஆப் மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி, உங்கள் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நித்யா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 26, 2025
புதுச்சேரி: 44 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

புதுச்சேரி காவல்துறை தலைவர் டி.ஜி.பி அறிவுறுத்தலின் படி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில், நேற்று மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. அதன்படி பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து 66 புகார்கள் பெறப்பட்டு, 44 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் மீது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
ஏனாம் பகுதிக்கு 3 நாட்கள் விடுமுறை

மோன்தா புயல் எதிரொலி காரணமாக ஆந்திராவின் காக்கிநாடா அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 27 முதல் 29 வரை 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நாட்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
புதுவை விமான சேவை ராஜமுந்திரி வரை நீட்டிப்பு!

பெங்களூருவில் இருந்து பகல் 11:45 மணிக்கு புதுவை வரும் விமானம், அங்கிருந்து 12:10 மணிக்கு ஹைதராபாத் செல்கிறது. அதனைத் தொடர்ந்து மாலை 4:45 மணிக்கு புதுவைக்கு வந்து, மீண்டும் மாலை 5:10 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இந்நிலையில், இன்று (அக்.26) முதல் புதுவை விமான சேவை ஹைதராபாத் வழியாக ராஜமுந்திரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று புதுவை விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


