News October 26, 2025

குறைந்த விலையில் வாகனம் வாங்க வாய்ப்பு

image

வேலூர் நகரில் போலீசார் பல்வேறு குற்றச்செயல்களில் பறிமுதல் செய்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொதுமக்களுக்கு ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் அக்டோபர் 30ம் தேதி காலை 10 மணிக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் தேவையான அடையாள ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர்.

Similar News

News January 21, 2026

வேலூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

குடியாத்தம் செருவங்கி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(45). தூய்மை பணியாளரான இவர், நேற்று(ஜன.20) குடியாத்தம் அடுத்த வள்ளிநகர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்: மாணவர்களுக்கு பாஸ் வழங்கிய ஆட்சியர்

image

கன்னியாகுமரியில் ஜன.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வழித்தடப் பாஸ்களை வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஜன.20) வழங்கினார். மாணவர்களின் கல்வி, இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!