News October 26, 2025
நாமக்கல்: சிலிண்டர் மானியம் வருகிறதா?

சிலிண்டர் மானியம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் HP Gas, Indane, அல்லது Bharatgas ஆகிய சிலிண்டர் நிறுவனத்தின் Logoவை கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் மொபைல் எண் அல்லது LPG ஐடியை உள்ளிடவும். இதன்பிறகு,மானியம் தொடர்பான விவரங்களும் தோன்றும். மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிகலாம்.SHARE பண்ணுங்க
Similar News
News October 26, 2025
நாமக்கல்: இதை செய்தால் கரண்ட் பில் வரவே வராது!

1.நாமக்கல் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம் 2.இதற்கு www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணபிக்காலம். 3.அல்லது திருச்செங்கோடு கொங்கு சமுதாயக் கூடத்தில், அக்.28 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெறும் சோலார் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.SHAREit
News October 26, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை (திங்கள்) அதிகாலை 4:20 மணிக்கு 07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயிலில் ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.
News October 26, 2025
நாமக்கல்:உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


