News October 26, 2025

பந்தலூரில் இப்படியா?

image

நீலகிரி, பந்தலூர் பகுதியில் உள்ள முதுமலை பென்னை பழங்குடியின அரசு ஆரம்பப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்
அமர இருக்கைகள் இல்லாததால் மாணவர்கள் தரையில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் குளிர் காலநிலையில் மாணவர்கள் தரையில் அமர்வது அவர்களுக்கு உடல்நல சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இப்பள்ளிக்கு இருக்கை வழங்க பொதுமக்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News January 26, 2026

JUSTIN: தேவர்சோலையில் தொழிலாளியை தாக்கிய யானை!

image

நீலகிரி, தேவர்சோலை பேரூராட்சி செம்பக்கொல்லி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், நேற்றிரவு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த யானை, அவரை தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின்படி, அவரை மீட்ட வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

News January 26, 2026

நீலகிரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

நீலகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நீலகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம், 0423-2449250 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News January 26, 2026

நீலகிரி: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

நீலகிரி மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

error: Content is protected !!