News October 26, 2025
தங்கம் விலை ₹5,600 குறைந்தது.. CLARITY

தீபாவளிக்கு முன்பு வேகமாக உயர்ந்த தங்கம் பின்னர் மளமளவென குறைந்தது. இதற்கான காரணம் புரியாமல் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அதன் பின்னரே, சர்வதேச அளவில் நிகழும் வர்த்தக மாற்றங்களே என்பது புலம்பட ஆரம்பித்தது. கடந்த 17-ம் தேதி புதிய உச்சம்(₹97,600) தொட்ட தங்கம் அதன் பின்னர் ₹5,600 குறைந்து ₹92,000 ஆக உள்ளது. விலை சரிவு ஏன் என வல்லுநர்கள் கூறிய காரணங்களை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
Similar News
News October 26, 2025
EB கட்டணம் குறைகிறது.. இதை செக் பண்ணுங்க

வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக ₹30,000 முதல் ₹78,000 வரை மானியம் வழங்குகிறது PM சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டம். இதன்படி, உங்க வீட்டில் 4 கிலோவாட் சோலார் பேனல்களை அமைத்தால், ₹2,00,000 வரை செலவாகும். இதில் ₹78,000 வரை அரசு மானியமாக தருகிறது. ஆன் கிரிட் சோலார் பேனல் வகைக்கு மட்டுமே இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் SHARE THIS.
News October 26, 2025
இந்த கேள்விக்கு சரியா பதில் சொல்லுங்க பார்ப்போம்!

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. இவற்றில் A, B, C ஆகியவற்றின் மதிப்பை சொல்லுங்க. HINT: 3A= 39 என்றால், ஒரு A எவ்வளவு என யோசிங்க. B & C எவ்வளவு என ஈசியாக கண்டுபிடிச்சிடலாம். சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க?
News October 26, 2025
இபிஎஸ் கூறியது அனைத்தும் புளுகு மூட்டை: ஸ்டாலின்

நெல் கொள்முதல் விவகாரத்தில் EPS கூறியவை அனைத்தும் புளுகு மூட்டைகள் என CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். ஆக்கப்பூர்வமாக, மக்களுக்கு உறுதுணையாக எதையும் செய்ய எண்ணமில்லை என சாடிய அவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் அறுவடை செய்ய முடியுமா என EPS செயல்படுகிறார் என விமர்சித்தார். மேலும், பொய்களையும், அவதூறுகளையும் புறந்தள்ளி மக்களுக்காக நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


