News October 26, 2025
வங்கிக் கணக்கில் ₹17,000 செலுத்துகிறது தமிழக அரசு

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு சேதத்திற்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேனியில் வெள்ள பாதிப்புகளை கணக்கெடுத்த அதிகாரிகள், நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ₹17,000, இதர நவதானிய பயிர்களுக்கு ₹13,000, வாழை, திராட்சை போன்றவற்றிற்கு ₹22,500 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 28, 2025
யாரும் ADMK – BJP கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை: CM

2026 தேர்தல் என்பது அதிமுக – பாஜக கூட்டணியிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் தேர்தலாகவே இருக்கும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். <<18126503>>வாக்குச்சாவடி பயிற்சிக் <<>>கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே உள்ளதாக கூறியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு எந்த கட்சியும் செல்ல விரும்பவில்லை என்றும், மக்களுக்கும் அவர்கள் மீது விருப்பமில்லை எனவும் சாடியுள்ளார்.
News October 28, 2025
கல்லூரியில் வேலை, ₹1,82,400 வரை சம்பளம்; APPLY NOW

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,708 பணியிடங்கள் காலியாக உள்ளன. மாதம் ₹57,700 முதல் ₹1,82,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், UGC/CSIR NET (அ) SLET/SET-ல் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் <
News October 28, 2025
திமுக ஆட்சி வீட்டுக்கு செல்வது உறுதி: விஜய்

விவசாயிகளின் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கிய திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி என விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு அரசியல் ரீதியாக எவ்வித அறிக்கை, அறிவிப்புகளையும் வெளியிடாமல் இருந்த அவர், நேற்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் அரசியல் பணிகளை தொடங்கியுள்ளார்.


