News October 26, 2025
வேலூர்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்

வேலுார் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் வரும் 27-ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாம் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது. புதன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும். 95 ஆயிரத்து 281 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News February 7, 2026
வேலூர்: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 7, 2026
வேலூர்: லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சுரேஷ் ( 57), தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று அதிகாலை சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது கன்டெய்னர் லாரி அவர் மீது மோதி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 7, 2026
வேலூர் அருகே பெண் பரிதாப பலி…

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவுரி ( 48), கடந்த 5 ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று அதிகாலை, கழிவறை சுத்தம் செய்யும் திராவகத்தை கவுரி குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கவுரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


