News October 26, 2025
மாரியின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்

‘பைசன்’ படக்குழுவை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாரிசெல்வராஜ் தனது படங்களில் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை என்றும், இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருப்பதாகவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 28, 2025
துணை ஜனாதிபதியாக சொந்த மண்ணில் கால்பதித்த CPR

துணை ஜனாதிபதியாக தேர்வான பிறகு முதல்முறையாக தனது சொந்த மண்ணான கோவைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி ஆகியோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், வியாழன் அன்று தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். அன்றைய தினமே மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
News October 28, 2025
ஷ்ரேயஸ் உடல்நிலை குறித்து சூர்யகுமார் கொடுத்த அப்டேட்

<<18116578>>ஷ்ரேயஸ் உடல்நிலை<<>> சீராக உள்ளதாக டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும், மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்வதாகவும் சூர்யா கூறியுள்ளார். உடலில் நல்ல முன்னேற்றமடைந்தாலும், இன்னும் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் அவர் இருப்பார் எனவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் ஷ்ரேயஸ் டிஸ்சார்ஜ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 28, 2025
டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாறுகிறது

பருவமழை முடியும் வரை டாஸ்மாக் கடைகளை, இரவு 10 மணிக்கு பதில், 1 மணி நேரம் முன்னதாக மூட அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, மதியம் 12 – இரவு 10 மணி வரை கடைகள் திறக்கப்படுகின்றன. மழை நேரத்தில் வீடுகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதால் கடை மூடும் நேரத்தை குறைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே, மழையின் சூழலுக்கு ஏற்ப கடைகளை சீக்கிரமாக மூட சில மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.


