News October 26, 2025
குழந்தைகளின் ஆற்றலை மேம்படுத்தும் சூப்பர் புட்ஸ்

சத்தான உணவு குழந்தைகளின் ஞாபக சக்தி, சிந்தனை மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்கும். அதற்கு முக்கியமான சில இதோ: * முட்டை – மூளைக்குத் தேவையான புரதம் உள்ளது *தானியங்கள் (கோதுமை,ராகி, ஓட்ஸ்) – நிலையான சக்திக்கு அடித்தளம் *கடலை மற்றும் பச்சை பயறு – புரதச்சத்து மிகுந்த உணவுகள் *வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள் – மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் *சுரைக்காய், பீட்ரூட் – மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
Similar News
News January 16, 2026
பிளிப்கார்ட், மீஷோ, அமேசானுக்கு அதிர்ச்சி

வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக உரிய அனுமதி பெறாமல் விற்பனை செய்ததற்காக அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, மெட்டா உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ₹10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விதிகளின்படி, குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு மேல், வயர்லெஸ் சாதனங்களுக்கு உரிமம் மற்றும் ETA சான்றிதழ் பெறுவது கட்டாயம்.
News January 16, 2026
மின் கட்டணத்தில் மாற்றம்.. மகிழ்ச்சியான செய்தி

2026 தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக அரசு அடுத்தடுத்து புதிய திட்டங்களையும், முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறையை மீண்டும் கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறதாம். இதற்காக அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு மாதாந்திர கட்டணம் படிப்படியாக அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News January 16, 2026
இந்தியாவில் விளையாட மறுப்பு: சமரசம் பேச களமிறங்கும் ICC

T20 உலகக் கோப்பையில் வங்கதேச அணியின் பங்கேற்பை உறுதிசெய்ய ICC முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. விரைவில் ICC குழு வங்கதேசத்திற்கு நேரடியாக சென்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. வீரர்களின் பாதுகாப்பு காரணமாக, இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேச அணி, போட்டிகளை இலங்கையில் நடத்த கோரிய நிலையில், சிக்கலுக்கு தீர்வு காண நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.


