News October 26, 2025
Sports Roundup: ரஞ்சி கோப்பையில் தமிழகம் அசத்தல்

*ஆசிய ரக்பி 7’s தொடரில், இந்தியா 21-7 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம். *லண்டன் TT தொடரில், இந்தியாவின் மணிகா பத்ரா காலிறுதிக்கு தகுதி. *நாகாலாந்திற்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழகம் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்துள்ளது. *புரோ கபடியில் பிங்க் பாந்தர்ஸ் 30-27 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்.
Similar News
News February 12, 2026
புதுச்சேரி: அரசு பணியாளர் தலைவர் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை முற்றுகையிட முயன்ற அரசு பணியாளர் நல கூட்டமைப்பின் தலைவர் சரவணன் மீது, உருளையன்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சரவணன் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News February 12, 2026
114 ரஃபேல் விமானங்கள் வாங்க பச்சைக்கொடி!

விமானப்படையைப் பலப்படுத்த ₹3.25 லட்சம் கோடி மதிப்பிலான 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்திற்கு DAC ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வரும் 17-ம் தேதி அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் 80% ரஃபேல் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2026
இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்

T20 WC-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. உடல்நல பாதிப்பு காரணமாக அபிஷேக் சர்மா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதில் சஞ்சு சாம்சனும், சிராஜுக்கு பதில் பும்ராவும் அணியில் இணைந்துள்ளனர். முதல் போட்டியில் USA-வை வீழ்த்திய இந்தியா, கத்துக் குட்டி அணியான நமீபியாவை எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


