News October 26, 2025
திருவள்ளூர் இன்றைய ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (25.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News February 6, 2026
திருவள்ளூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்னிகா(27), பெண் காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உடற்தகுதி தேர்வுக்காக வேப்பம்பட்டில் வசிக்கும் பெரியம்மா வீட்டில் தங்கி வந்தார். ஆவடியில் உடற்தகுதித் தேர்வு ஏற்பட்டது. இதில், அவருக்கு புள்ளிகள் குறைவாகக் கிடைத்ததால் மன வேதனை அடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு தூங்கச் சென்ற ஹர்னிகா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News February 6, 2026
பூண்டி அருகே துடிதுடித்து பலி!

சதுரங்கப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(37). பொக்லைன் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு திருவள்ளூரில் இருந்து தேவேந்திரன், பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புல்லரம்பாக்கத்தில் எதிரே வந்த வினோத்(34) ஓட்டி வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 6, 2026
கும்மிடிப்பூண்டி அருகே பரிதாப பலி!

பாதிரிவேடு அடுத்த தாணியம்பூண்டி கிராமத்தில் இரும்பு குழாய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் பீகாரைச் சேர்ந்த ஜலாவுதீன்(48). நேற்று முன் தினம் இரவு, இவரின் பணியின் போது இரும்பு குழாய் தவறி இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


